பெரியார் சிலை அவமதிப்பு… நாதக நிர்வாகி அதிரடி கைது

74பார்த்தது
பெரியார் சிலை அவமதிப்பு… நாதக நிர்வாகி அதிரடி கைது
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சையாக பேசி வரும் நிலையில், பெரியார் சிலை அவமதித்த அக்கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். நாதகவின் குருதிக்கொடை பிரிவு செயலாளரான அஜய் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெரியார் சிலையை அவமதித்ததாக பெரியார் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில், காவல்துறையினர் அஜய்யை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி