போச்சம்பள்ளி அருகே டூவீலர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்த நரசம்பட்டியை சேர்ந்தவர் டேனியல் ஜான்விச்லிப் (22). இவர் நேற்று முன்தினம் (செப்.11) மதியம் டூவீலரில் புலியூர் - ஊத்தங்கரை சாலையில் உள்ள ஜே. கே. பட்டி கூட்ரோடு அருகில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த டேனியல் ஜான் விச்லிப் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.