இன்று (29-08-2024) காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டப்பட்ட காணப்பட்ட நிலையில் மாலை 5 மணி முதல் போலியோ மேட்டுக்கடை, புட்டன்கடை, அரசம்பட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.