வேப்பனஹள்ளி - Veppanahalli

தாசிரப்பள்ளி: கன்று விடும் விழாவில் 200 கன்றுகள் பங்கேற்பு

தாசிரப்பள்ளி: கன்று விடும் விழாவில் 200 கன்றுகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளி பஞ்சாயத்து தாசிரப்பள்ளி கிராமத்தில் 1-ம் ஆண்டு கன்று விடும் திருவிழா நடைபெற்றது. இதில் பர்கூர் வேப்பனப்பள்ளி, குருநாயனப்பள்ளி, வரட்டனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 200 கன்றுகள் பங்கேற்றிருந்தன. அனைத்து கன்றுகளும் வாடி வாசலுக்கு கொண்டு வரப்பட்டன.  பின்னர் ஒவ்வொரு கன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 70 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த கன்று விழாவை ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு களித்தனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி