கிருஷ்ணகிரி: சமையல்காரரை தாக்கிய சிறுவன் கைது

82பார்த்தது
கிருஷ்ணகிரி: சமையல்காரரை தாக்கிய சிறுவன் கைது
கிருஷ்ணகிரி, பழையபேட்டை பக்கிரி மஸ்தான் தெரு பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (38) சமையல்காரரான. இவர் நேற்று முன்தினம் காந்திரோட்டில் உள்ள மதினா மசூதி அருகே சென்றபோது ரிஸ்வானை வழிமறித்த இரண்டு பேர் பணம் கேட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரிஸ்வான் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். இதுகுறித்து ரிஸ்வான் கொடுத்த புகாரின் பேரில் அவரை தாக்கிய கிருஷ்ணகிரியை சேர்ந்த 16 வயது சிறுவனை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி