திமுக எம்.பி. அப்துல்லா தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “நடிகர் அஜீத் ஒருமுறை கலைஞர் முன்பு எழுந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். பலரும் அது அஜீத்தின் வீரம் என்றனர். ஆனால் அது, ‘கலைஞர் எனும் அரசர் தன் குடிமக்கள் யாரும் தைரியமாக தன் முன் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்’ என மக்களுக்கு ஏற்படுத்திய நம்பிக்கை என்றேன். அன்னபூர்ணா உரிமையாளர் கூனி குறுகி மன்னிப்புக் கேட்கும் வீடியோ பார்க்கும் போது அதுதான் நினைவில் வந்தது” என குறிப்பிட்டுள்ளார்.