ஒர் ஆண்டு காலங்களாக போராடும் இருளர் இன மக்கள்.

50பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஜெகதேவி ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் இருளர் காலனியில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டை தற்பொழுது ஆஹா கிரைனைட் ஓனர் நாசிம் அலி என்பவர் தன்னுடைய பட்டா நிலம் என்று கூறுவதாக பல முறை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திலும் மனு கொடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பதால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பர்கூர் வட்டாட்சியர் நேரில் வந்து தேர்தல் முடிந்த உடன் சுடுகாட்டை மீட்டு தருவதாக பொதுமக்களிடம் கருப்பு கொடியை அகற்றி ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். தற்பொழுது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இன்று பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தை 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு வட்டாட்சியரிடம் கேட்டதற்கு என்னுடைய பட்டா நிலம் கொடுக்க முடியாது என்று கூறுகிறார், நான் என்ன செய்வது அவர் நீதிமன்றத்திற்க்கு செல்வதாக கூறுகிறார் என்று அலட்சியமாக பதிலளிக்கிறார். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்து மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டை மீட்டு தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி