அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பேசியதற்காக நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரி இருந்தார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள வானதி சீனிவாசன், "நான் சண்டை போட்டதாக ஹோட்டல் உரிமையாளர் கூறியதில் உண்மை இல்லை. நான் அந்த கடையில் ஜிலேபி சாப்பிட்டதோ, சண்டை போட்டதோ இல்லை. ஒரு ஆண் எம்.எல்.ஏ அந்த இடத்தில் இருந்திருந்தால் இப்படி பேசி இருப்பார்களா.? என கேள்வி எழுப்பினார்.