கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ஏந்தல் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் (40). கட்டிட மேஸ்திரியான. இவர் சம்வம் அன்று பெங்களூருவில் இருந்து டூவீலரில் ஊருக்கு வந்துக்கொண்டிருந்தபோது பர்கூர் அடுத்த ஜிட்டோபனபள்ளி என்ற பகுதியில் சென்ற போது அந்த வழியக கார், டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.