அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரிய நிலையில் வானதி ஸ்ரீனிவாசன் இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். “ஸ்ரீனிவாசன் காலை என்னை செல்போனில் அழைத்து மன்னிப்பு கேட்டார், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியதால் அவருடன் சந்திப்பு நடந்தது. தான் RSS பின்புல குடும்பத்தைச் சேர்ந்தவன் என தெரிவித்தார். பாஜக அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததாக சமூக ஊடகங்களில் வருவது தவறான கருத்து” என வானதி கூறினார்.