
நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளியிடம் செல்போன் பறித்தவர் கைது
கிராத்தூரைச் சேர்ந்தவர் கைலாஷ்நாத் (20). இவர் நாகர்கோவில் ஓட்டல் ஊழியர். இவர் நேற்று கோட்டார் ரயில் நிலையம் செல்ல பாறைக்காமடம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆன்றோ சாஜின்(37) என்பவர் கைலாஷ்நாத்தை வழிமறித்து அவரிடமிருந்து ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ. 300 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்து சென்றார். கோட்டார் போலீசார் ஆன்றோ சாஜினை கைது செய்தனர்.