நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடலோர காவல் குழும போலீசார் அதி விரைவுப் படையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 68 கிலோ மீட்டர் தூர கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலில் சந்தேகத்திற்கிடமானவர்கள் யாராவது வந்தால், அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.