இந்தியா முழுவதையும் அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் ஒரு மாநிலத்தை மட்டும் தொடவே முடியவில்லை. அந்த மாநிலம் கோவாதான். இது போர்த்துகீசியர்கள் ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே இந்தியா வந்த போர்த்துகீசியர்கள் கோவாவை கைப்பற்றியிருந்தனர். 1947-ல் நாடு விடுதலை அடைந்த பின்னரும் கோவா போர்த்துகீசியர்களின் அடிமையாகவே இருந்தது. அங்கு போர்த்துகீசிய ஆட்சி 1961-ல் முடிவுக்கு வந்தது.