குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (ஜனவரி 23) நாகர்கோவிலில் ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள், கடம்படி வளாகம் பகுதியில் யானைகள் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள பாலம் வழியாக வந்து விளை நிலங்களை நாசம் செய்வதாக புகார் கூறினர். இதனைத் தொடர்ந்து பாலம் வழியாக யானை வராமல் தடுக்க கம்பிகள் நட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.