நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை!

53பார்த்தது
வரும் ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது, நாட்டின் 76 வது குடியரசு தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காதவாறு பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பாதுகாப்பு பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மோப்பநாய்களைக் கொண்டும் மெட்டல் டிடெக்டர்களைக் கொண்டும் இந்த பாதுகாப்பு சோதனை பணியானது நடைபெற்றது. 

இதில் பத்துக்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் ஈடுபட்டனர். ரயில் பெட்டிகள், ரயில் தண்டவாளங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி