களியங்காடு சிவன் கோயிலில் தேய்பிறை சிறப்பு பூஜை

54பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் அமைந்துள்ள கால பைரவர் சன்னதியில் தைமாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை யொட்டி காலை 10. 30 மணிக்கு காலபைரவர் சாமிக்கு மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பழம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்காரம், தொடர்ந்து அலங்கார தீபாராதனை, சிவன் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி