கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினச்சேரியில் இன்று (ஜன.26) காலை டெம்போ ஒன்று வைக்கோல் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.
ரயில்வே பாலத்தில் டெம்போ வரும்போது திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக தடுப்பு இருந்ததால் ரயில்வே தண்டவாளத்தில் டெம்போ விழவில்லை. பெரும் விபத்து இதன் மூலம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து டெம்போவை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.