நாடெங்கும் இன்று (ஜன. 26) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் தேசியக்கொடியை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.