தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்துள்ளது, அதே நேரம் ஜனவரி 30ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், வடதமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், மிதமான மழை வரை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.