கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனைத் தொடர்ந்து வலம்புரி விலையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியினை கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா இன்று பார்வையிட்டு பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியரும் சென்றார்.