கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து வாகனம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் வந்துள்ளது. இந்த வாகனத்தை நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் அந்தந்த காவல் சரக பகுதிகளில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.