கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோதைகிராமம் காசிவிஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. தயிர், பால், பன்னீர், களபம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களினால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு காலபைரவரை வழிபட்டனர்.