தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக சிறுதொழில், வியாபாரம் செய்ய நினைக்கும் தனி நபர்களுக்கு ரூ.15 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. திருப்பிச் செலுத்தும் காலம் 3-5 ஆண்டுகள். ஆண்டுக்கு வட்டி விகிதம் 7-8%. பயனாளியின் பங்கு 5%. தகுதிகள்: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.