கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறை பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 72). சம்பவத்தன்று இவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு கடியப்பட்டிணம் செல்லும் அரசு பஸ்சில் அண்ணா பஸ்நிலையம் வந்தார்.
பஸ் நிலையத்தில் இறங்கிய போது, வேலம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தான் வந்து இறங்கிய பஸ்சில் தேடினார். ஆனாலும் நகை கிடைக்கவில்லை. பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நகையை அபேஸ் செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து வேலம்மாள் கோட்டார். போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.