கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நோயாளிகளின் வருகை பதிவேடு, ஆய்வக பரிசோதனை கூடம், மருந்துகளின் இருப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.