
நாகர்கோவிலில் புகையிலைப் பொருள் விற்ற கடைக்கு சீல் வைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தளவாய்த் தெருவில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதற்காக கிடைத்த தகவலின்பேரில் அந்த கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.