
'தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும்'
தமிழக பட்ஜெட் நாளை (மார்ச்.14) தாக்கலாகிறது. இதையொட்டி முதன்முறையாக தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில், நடப்பு நிதியாண்டில் தமிழ்நட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, தேசிய சராசரியை விட 1.64 மடங்கு அதிகம். தேசிய அளவில் 6% மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களிப்பை வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.