செங்கல்பட்டு டவுன் - Chengalpattu Town

காஞ்சிபுரத்தில் வரும் 12ல் நாட்டுப்புற கலை பயிற்சி

காஞ்சிபுரத்தில் வரும் 12ல் நாட்டுப்புற கலை பயிற்சி

தமிழ்நாடு சட்டசபை 2023- -- 24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தின் 25 இடங்களில், பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி கலைப்பயிற்சிகள் வழங்கப்படும் என, நிதி அமைச்சர் வாயிலாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, கலை பண்பாட்டுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில், பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையம் வரும், 12ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான, தெருக்கூத்து, மிருதங்கம், புலியாட்டம், கை சிலம்பாட்டம் ஆகிய நான்கு கலைப்பிரிவுகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில், 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் சேரலாம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர்ந்து பயில விண்ணப்பம் பெற தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சதாவரம், ஓரிக்கை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துஉள்ளார்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా