மாமல்லபுரத்தில் குவிந்த இருளர் பழங்குடியின மக்கள்

82பார்த்தது
மாமல்லபுரத்தில் நாளை அதிகாலை இருளர் பழங்குடியின மக்களின் மாசி மகத் திருவிழா மாமல்லபுரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான இருளர் பழங்குடியின மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் எனப்படும் மாசி மக திருவிழா இங்கு தமிழகத்தில் உள்ள இருளர் பழங்குடியின மக்கள் மற்றும் வெளி மாநிலத்தவர் வெளிநாட்டில் உள்ளவர்களும் இந்த கடற்கரைக்கு வந்து நாளை மாசி மக திருவிழாவில் கலந்துகொண்டு மாசி மக திருவிழாவை கொண்டாடுவார்

இருளர் பழங்குடியின மக்களின் தெய்வமாக வணங்கப்படும் கன்னியம்மன் கடந்த மாதம் அவர்களிடம் இருந்து கோபித்துக் கொண்டு கடலுக்கு சென்று விடுவார் அவரை மீண்டும் கடலிலிருந்து வீட்டுக்கு கொண்டு செல்லும் விழா இந்த மாசி மகம் திருவிழா

கடற்கரையில் மணலில் ஏழு படிகள் அமைத்து அவைக்கு பூ படம் மாலை சந்தனம் குங்குமம் வைத்து அனைத்து படிகளிலும் கற்பூரம் இயற்றி கண்ணியம்மனை வணங்கி அவர்களது தெய்வத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்வது இந்த மாசி மக திருவிழாவின் சிறப்பு

அதற்கான ஏற்பாடுகளை மாமல்லபுரம் நகராட்சி தற்போது அவர்களுக்கென்று கழிவறைகள் குடிநீர் மருத்துவ முகாம் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளது இதற்காக மாசி மக திருவிழா எனப்படும் விழா குழுவினர் இரவு முழுவதும் விழிப்புணர்வு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி