தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000 உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். நாளை தமிழக சட்டமன்றத்தில் 2025- 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து அறிவிப்பு வரும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.