தென்காசி: புளியங்குடி பகுதியில் தீய சக்தியை வேரறுப்போம் என்ற தலைப்பில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழகத்திற்கு ஆகாத ஒரு கட்சி என்றால் அது திமுகதான். 2026 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் ஓட்டு குத்தும் ஆவேசத்தில் EVM மெஷினே உடைய வேண்டும். திமுகவில் உள்ள நல்லவர்களும் அக்கட்சியில் இருந்து வெளியேற தொடங்கிவிட்டனர்” என்றார்.