நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத ஏசி உங்கள் வீட்டில் இருக்கிறதா? கவனம், அதில் அச்சுறுத்தக்கூடிய பாம்புகளும் இருக்கலாம். இதே போன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெண்டுர்த்தியில் சத்யநாராயணா என்ற நபரின் வீட்டின் ஏசியில் ஒரு பாம்பு இருப்பதை அவரது குழந்தைகள் பார்த்துள்ளனர். பின்னர் பாம்பு பிடிப்பவரை வரவழைத்து பார்த்தபோது ஒரு பாம்பு கூட்டமே உள்ளே இருந்துள்ளது. அனைத்தையும் பாம்பு பிடிப்பவர் பிடித்துவிட்டார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.