நான்கு வழி சாலை பணியை தடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் அல்லிவிளாகத்தில் விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை அமைக்கும் இடத்தில் கம்பிவேலியை அமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தங்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான உரிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டிய விவசாயிகள் அதை பெறுவதற்காகவே போராட்டம் நடத்தியதாக தெரிவித்தனர்.