கரூர் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்த எச்சில் இலையில் உருளலாம் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. தமிழக அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் தாக்கல் செய்த மனுவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.