திருப்போரூரில் நாம் தமிழர் கட்சி பேரணி அனுமதி மறுப்பு

82பார்த்தது
திருப்போரூரில் நாம் தமிழர் கட்சி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 16ஆம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் குறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக அனுமதி கடித்தமானது வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது திருப்போரூர் கந்தசாமி திருக்கோவிலில் மாசி மாச பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் சுப தின நாள் என்பதால் அதிகப்படியான பக்தர்கள் பொதுமக்கள் திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தருவதால் கூட்ட நெரிசலானது ஏற்படும் எனக் கூறி திருப்போரூர் காவல் நிலையம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்படும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி ஆனது மறுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி