சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ஹோட்டலில், லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பழுதான லிப்ட், நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளது. அப்போது, ஊழியர் ஒருவர் லிப்டை சரிசெய்ய முற்பட்டபோது லிப்ட் அறுந்து விழுந்தது. இதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்டு நேர போராட்டத்திற்கு பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.