தவெக-வின் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நாளை அறிவிப்பு

62பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் தனது நிர்வாக வசதிக்காக, 120 கட்சி மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகளை நியமித்து வருகிறது. இதுவரை 96 கட்சி மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 24 கட்சி மாவட்டங்களுக்கான புதிய பொறுப்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (மார்ச் 13) அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக நியமிக்கப்படும் 24 கட்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன், தனித்தனியே நாளை விஜய் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி