காஞ்சிபுரம் நகரம் - Kanchipuram City

2 மாதங்களில் 14 லாரிகள் பறிமுதல்

2 மாதங்களில் 14 லாரிகள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் சுற்றியுள்ள பகுதிகளில், ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதால், விபத்து ஏற்படுவதுடன் சாலையும் சேதமாகிறது. குவாரியிலிருந்து சென்னை, செங்கல்பட்டு நோக்கி செல்லும் கனரக லாரிகள், வாலாஜாபாத் வழியாகவே செல்கின்றன. அவ்வாறு வாலாஜாபாத் சுற்றியுள்ள பகுதிகளில், விதிமீறி இயங்கும் கனரக லாரிகள் மீது வருவாய் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் ஒன்பது லாரிகளும், ஆகஸ்டில் ஐந்து லாரிகளும், என, இரு மாதங்களில் மட்டும் 14 லாரிகள் பறிமுதல் செய்த அதிகாரிகள், 9.13 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உள்ளனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా