
பாலவாக்கத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாலவாக்கம் பகுதியில், 183வது வட்ட அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான மறைந்த எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்தநாள் விழா இன்று (ஜன. 17) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் வட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில், மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ராஜேந்திரன், முனுசாமி, எம்ஜிஆர் மன்ற நிர்வாகி மீரான் பாய், அம்மா பேரவை நிர்வாகி சேகர், மகளிரணி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.