மதுராந்தகம் - Mathuranthakam

வேளாண்மை கணக்கெடுப்புகாண இரண்டாம்கட்ட பணிக்கான பயிற்சி முகாம்

வேளாண்மை கணக்கெடுப்புகாண இரண்டாம்கட்ட பணிக்கான பயிற்சி முகாம்

மதுராந்தகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வேளாண்மை கணக்கெடுப்புகாண இரண்டாம் கட்ட பணிக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 11வது வேளாண்மை கணக்கெடுப்பு இரண்டாம் கட்ட பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டது ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குனர் திரு. குப்புசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியை மதுராந்தகம் வருவாய் கோட்ட அலுவலர் திரு. தியாகராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வேளாண்மை கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார் மேலும் இப்பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் துல்லியமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என எடுத்துரைத்தார் இந்நேர்வில் பொருளியல் மற்றும் புள்ளி இயல் துறை சார்ந்த கோட்டா புள்ளி இயல் உதவி இயக்குனர் திரு முரளிதரன், வட்டார புள்ளியல் ஆய்வாளர் திரு கோபி உள்ளிட்ட அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். இப்ப பயிற்சியில் செய்யூர் வட்டாட்சியர் திரு. சரவணன் மதுராந்தகம் கோட்டத்தை சார்ந்த வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా