சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதகால காத்திருப்புக்கு பிறகு வெகுவிரைவில் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் பூமிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ்-டிராகன்-க்ரூ 10 திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.