திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்தியை ஏற்றுகொண்டால் நிதி தருவேன் என்று சொல்கிற அராஜகம் இருக்க முடியுமா?. தமிழர்களை அராஜகவாதிகள் என்று சொன்ன தர்மேந்திர பிரதானை அரை மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வைத்தார்கள் தமிழ்நாட்டு எம்.பி.,க்கள். இந்த போர்குணத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் தமிழ்நாட்டிலிருந்து வரும் எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறைக்க சதி செய்கிறார்கள்” என்றார்.