திருப்போரூர் - Thiruporur

கோவில் அருகே டாஸ்மாக் பம்மலில் பெண்கள் அச்சம்

கோவில் அருகே டாஸ்மாக் பம்மலில் பெண்கள் அச்சம்

சென்னை, பம்மல் பிரதான சாலையில், வங்கி மற்றும் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே, டாஸ்மாக் கடை உள்ளது. இதில், காலை 5: 00 மணியில் இருந்து, இரவு 12: 00 மணி வரை மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு மதுபானம் வாங்கும் 'குடி'மகன்கள், வீடு மற்றும் கடைகளின் அருகே மது அருந்துகின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், சாலையோரம் சிறுநீர் கழிப்பது, போதையில் அங்கேயே விழுந்து கிடப்பது என, அட்டூழியம் செய்து வருகின்றனர். இதையடுத்து, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என, பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை என, பம்மல் பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'இந்த டாஸ்மாக் கடையால் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறோம். பெண்கள், குழந்தைகள், முதியோர் நடந்து செல்ல முடியவில்லை. அரசு உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా