பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, நாதக சீமான் நலம் விசாரித்துக்கொண்டனர். இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி, சீமான் ஒன்றும் போராட்டங்களுக்காக வழக்கு வாங்கவில்லை, என்னை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக வழக்கு வாங்கினார். பொது வெளியில் என்னை பாலியல் தொழிலாளி என அவர் கூறுகிறார், அப்போதெல்லாம் நீங்கள், குஷ்பு உள்ளிட்டோர் எனக்காக எந்த குரலும் கொடுக்கவே இல்லை என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.