
மேல்மருவத்தூரில் பீரோவை உடைத்து ரூ. 4. 5 லட்சம் திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் காவல் எல்லைக்குட்பட்ட சோத்துப்பாக்கம் வாசுகி நகர் பகுதியில் வசித்து வருபவர் கஜபதி, 71. இவரது மனைவி கலாவதி, 60. கீழ் தளத்தில் வசித்து வருகின்றனர். வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில், நேற்று முன்தினம், அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4. 5 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு சவரன் தங்க நாணயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் கஜபதி புகார் அளித்துள்ளார். போலீசார், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.