ஸ்ரீ பெரும்பதூர் - Sri Perumbadhur

தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை

தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை

தாம்பரம் அடுத்த பெருங்களத்துார், திருவள்ளுர் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா, 22. இவர், கானா பாடல் பாடி, மேளம் அடிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று காலை, புது பெருங்களத்துார் குண்டுமேடு சுடுகாட்டில், தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார், ஜீவாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் பெருங்களத்துார், குண்டுமேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, ஜீவா காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணுக்கு திருமணம் செய்ய, அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. ஆனாலும் ஜீவாவும், அந்த பெண்ணும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை பெருங்களத்துாரில், ஜீவாவும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்த போது, உறவினர்கள் அதைப் பார்த்து, அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, நேற்று முன்தினம் இரவு, பல்லாவரத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேருடன் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, தகராறு செய்துள்ளார். அங்கு போலீசார் வந்ததும் மற்றவர்கள் தப்பிச் சென்ற நிலையில், ஜீவா மட்டும் பெண்ணின் உறவினர்களிடம் சிக்கியுள்ளார். அதன் பின், ஜீவாவை குண்டுமேடு சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று கட்டையால் தாக்கியும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்துள்ளனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా