செங்கல்பட்டு டவுன் |

பரனூர் சுங்கச்சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்

தொடர் விடுமுறை எதிரொலி- பரனூர் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்.!! வார விடுமுறை, முகூர்த்த தினம் மற்றும் மிலாடி நபி விடுமுறை ஆகிய தொடர் விடுமுறைகள் வர உள்ளதால், சென்னையில் தங்கியுள்ள தென் மாவட்டத்தை சேர்ந்த லட்ச கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் அரசு, தனியார் பேருந்துகளிலும், வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் ஒரே நேரத்தில் தென் மாவட்டத்தை நோக்கி செல்வதால் பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்க்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பரனுர் சுங்க சாவடியை கடந்து செல்வதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய ஒரு சூழல் உருவாகி உள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு