சிங்கப்பெருமாள் கோவிலில் ரயில்வே மேம்பாலம் ஒரு பகுதி திறப்பு

84பார்த்தது
சென்னைக்கு அருகாமையில் உள்ளது சிங்கப் பெருமாள் கோயில் ஊராட்சி, வளர்ந்து வரும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். சிங்கபெருமாள் கோவிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் வழியாக திருவள்ளுர் செல்ல வேண்டுமென்றால் திருக்கச்சூர் ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல முடியும். இந்த பகுதியில் போக் குவரத்து நெரிசலை குறைக்க, கடந்த தி. மு. க. , ஆட்சியில், 2008ம் ஆண்டு ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்பட்டன. ஒரு சில காரணங்களால் அந்த பணி கிடப்பில் போடப்பட்டன.

மீண்டும் 2021ல் தி. மு. க. , ஆட்சி பொறுப் பேற்ற பின், மீண்டும் ஒப்பந்தம் விடப்பட் டது. 138 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த 15-12- 2021ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ. வ. வேலு தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடைபெற்றன. தற்போது, தாம்பரம் மார்க்கத்தில் பணிகள் முடிவடைந்து, ஒருபுறம் மட்டும் திறக்கும் வகை யில் மின் விளக்குகள், வழிகாட்டி பலகைகள் உள்ளிட்டவை அமைக் கப்பட்டு ஒரு புறம் பணிகள் முடிவடைந்த நிலையில் அதற்கான திறப்பு விழா இன்று மதியம் நடைபெற்றன‌. இதில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் ஏ. வ. வேலு, தா. மோ. அன்பரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி மேம்பாலத்தை திறந்து வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி