கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை அடுத்த தலச்சேரி பகுதியில், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் காதுக்குள் பாம்பு புகுந்து விட்டதாகவும், அதை தீயணைப்பு துறையினர் மீட்டதாகவும் உலா வரும் வீடியோவை நம்ப வேண்டாம் என்று தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். காதுக்குள் பாம்பு புகுந்திருப்பது போன்ற வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், இது உண்மை கிடையாது என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.