மறைமலைநகரில் ட்ரோன் பறக்காததால் பரபரப்பு

80பார்த்தது
மறைமலைநகரில் நில ஆவணங்களை நவீன மயமாக்கும் விதமாக நிலங்களை அளக்கும் ட்ரோன் பறக்காததால் கலெக்டர் பாதியிலேயே சென்றதால் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நில ஆவணங்களை ட்ரோன் மூலம் அளந்து நவீன நயமாக்கும் திட்டம் துவக்க விழா நடைபெற்றது. மறைமலைநகர் மைதானத்தில் நில ஆவணங்களை அளக்கக்கூடிய ட்ரோன் எந்திரத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைப்பதற்காக வந்திருந்தார்.

ட்ரோன் மைதானத்தில் தயார் நிலையில் இருந்தது இதில் நில அளவைத்துறை அதிகாரிகள் மறைமலைநகர் நகர் மன்ற தலைவர் துணைத்தைலைவர் என அனைவரும் கலெக்டர் ட்ரோனை துவக்கி வைப்பதற்காக காத்திருந்தனர். கலெக்டரிடம் ட்ரோனை துவக்கி வைப்பதற்கான ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு ட்ரோனை பறக்கவிட நீண்ட நேரமாக முயற்ச்சித்து பார்த்தார். ட்ரோன் இருந்த இடத்தை கிளம்பியபாடில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த கலெக்டர் கடுப்பாகி கையிலிருந்ந ரிமோட்டை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கையில் திரும்ப கொடுத்துவிட்டு சிட்டாய் பறந்துவிட்டார்.

கலெக்டர் சென்றபின் அரைமணி நேரம் கழித்துத்தான் ட்ரோன் பறக்க தொடங்கியது. கலெக்டர் இருக்கும் போது ட்ரோன் பறக்காமல் போன சம்பவத்தால் அதிகாரிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி